×

பிளஸ் 2 தேர்வில் ரமணவிகாஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை, மே 7: சிவகங்கை அருகே சோழபுரம், ஸ்ரீரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவ,மாணவிகள் 148 பேர் தேர்வெழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஹரிதா 581 மதிப்பெண், மாணவி ஹரிணி 576, மாணவிகள் கார்த்திகா, ஷபானா பானு ஆகியோர் 564 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

கணினி அறிவியலில் 3 மாணவர்களும், பொருளியல், கணினி பயன்பாடுகளில் தலா ஒரு மாணவரும் என மொத்தம் 5மாணவர்கள் நூற்றுக்கு 100 மதிப்பெண் பெற்றனர். 2 மாணவர்கள் 575 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 10மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 33 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 103 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கு கூடுதலாகவும் பெற்றனர். தேர்ச்சி பெற்ற, சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

The post பிளஸ் 2 தேர்வில் ரமணவிகாஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ramanavikas School ,Sivagangai ,Sriramanavikas Higher Secondary School ,Cholapuram ,Haritha ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்